ஆப்நகரம்

மீண்டும் தாமதமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’?

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் வெளியாவதில் மீண்டும் தாமதமாகிறது.

TNN 19 Jun 2017, 2:19 am
‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் வெளியாவதில் மீண்டும் தாமதமாகிறது.
Samayam Tamil adhagappattathu magajanangalay movie again delayed for release
மீண்டும் தாமதமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’?


இயக்குனர் இன்பசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இந்தப் படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இம்மாதம் 16ம் தேதி வெளியாக இருந்தது.

16ம் தேதி அன்று வேறு சில படங்கள் ரிலீஸ் ஆக இருந்ததால்‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்துக்கு 50 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லை. எனவே இந்த படத்தின் ரிலீஸை 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். அன்றைக்கு கௌதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ படம் வெளியாக உள்ளது. கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘இவன் தந்திரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தப் படத்தை ஜி. தனஞ்சயன் வெளியிடவிருப்பதால் கூடுதல் தியேட்டர்களை குறி வைத்திருக்கிறார். எனவே இந்த முறையும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்