ஆப்நகரம்

‘அதே கண்கள்’ சிங்கிள் டிராக் பாடல் ஜனவரி 2ல் வெளியீடு!

அதே கண்கள்’ படத்தின் சிங்கிள் டிராக் பாடலை ஜனவரி 2ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

TNN 28 Dec 2016, 6:08 pm
அதே கண்கள்’ படத்தின் சிங்கிள் டிராக் பாடலை ஜனவரி 2ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
Samayam Tamil adhey kangal movie single track will be release in january 2
‘அதே கண்கள்’ சிங்கிள் டிராக் பாடல் ஜனவரி 2ல் வெளியீடு!


திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’. இந்த நிறுவனம் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் கலையரசன், ஷிவதா, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர்.

‘அதே கண்கள்’ த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கி வருகிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ‘அதே கண்கள்’ படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அடுத்தப்படியாக படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளார்கள். வருகிற ஜனவரி 2-ம் தேதி ‘’தந்திரா...’’ என்ற சிங்கிள் டிராக் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Adhey Kangal movie single track will be release in january 2

அடுத்த செய்தி

டிரெண்டிங்