ஆப்நகரம்

ஜி.வி. பிரகாஷுடன் டூயட் பாடிய நடிகை அதிதி ராவ்!

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயில்’ படத்தில் நடிகை அதிதி ராவ், ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

Samayam Tamil 5 Dec 2018, 4:43 pm
இயக்குனர் மணிரத்னத்தினால் ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அதிதி ராவ். பின்னர் தமிழில் போதிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆகையால் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil GV-P


இதற்கிடையில் இவர் ‘காற்று வெளியிடை’ படத்தின் ப்ரோஷனுக்காக அவர் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடல் ஒன்றை பாடினார். அப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தனக்கு சினிமாவில் பாடல் பாடும் ஆசை இருக்கிறது என்றும் அதிதி ராவ் அப்போது கூறியிருந்தார். அவரின் ஆசையை தற்போது ஜி.வி. பிரகாஷ் நிறைவேற்றி வைத்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘ஜெயில்’. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தான் நடிகை அதிதி ராவ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘காத்தோடு...’ என்று தொடங்கும் இந்த பாடலில் ஜி.வி.யுடன் அதிதி டூயட் பாடி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்