ஆப்நகரம்

அதிதியால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கிடைத்த பெருமை: குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளதுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 11 Dec 2021, 6:07 pm
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாடைபெற்று வருகிறது.
Samayam Tamil Aditi Shankar
Aditi Shankar


இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இந்தப்படத்திற்கு 'விருமன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால், இப்போதே இந்தப்படத்தில் அதிதியின் கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிசங்கர் டாக்டர் படிப்பு படித்து முடித்துள்ளார். இதனை அடுத்து தற்போது அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிதி ஷங்கருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதிதி ஷங்கர்.



அதே போல் டாக்டர் பட்டத்துடன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிதி ஷங்கர் டாக்டர் பட்டம் பெற்றதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்