ஆப்நகரம்

Viruman: அதிதி ஷங்கர் இப்படி பண்ணலாமா..?: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் அதிதி ஷங்கர் பாடியுள்ள ‘மதுர வீரன்’ பாடல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 9 Aug 2022, 11:19 am
கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான 'கொம்பன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். அண்மையில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Samayam Tamil அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்


சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.

‘விருமன்’ படத்தில் ‘மதுர வீரன்’ என்ற பாடலை பாடியுள்ளார் அத்தி. இந்நிலையில் விருமன் படத்தில் அதிதி பாடிய பாடல் தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதாவது இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கிராமிய பாடகி ராஜலட்சுமி தான், ஆனால் படக்குழு இறுதியில் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Vijay: விஜய் சாட்சியாக நடந்த இரண்டாவது திருமணம்: பகீர் கிளப்பிய எஸ்.ஏ.சி..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் 'சாமி சாமி' போன்ற பாடல்களை பாடி பிரபலமானார். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இவர் பாடிய பாடலை அதிதிக்காக ‘விருமன்’ படக்குழு நீக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிதி இப்படி பண்ணலாமா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்