ஆப்நகரம்

மதுரை திரையரங்கில் நுழைந்த அதிமுகவினர்; 'சர்கார்’ பட மதியக் காட்சிகள் ரத்து!

மதுரை: சர்கார் திரையிட்ட திரையரங்கில் நுழைந்த அதிமுகவினர், படம் திரையிடலை தடுத்து நிறுத்தினர்.

Samayam Tamil 8 Nov 2018, 3:30 pm
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சிக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகக் கூறி, அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil Vijay Movie.


இந்நிலையில் மதுரை சினிப்ரியா காம்ப்ளக்ஸுக்குள் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் அதிரடியாக நுழைந்தனர். அங்கு ’சர்கார்’ படம் திரையிடலை இன்று மதியம் தடுத்து நிறுத்தினர். பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் படம் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

இதேபோல் மதுரையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு படம் நிறுத்தப்படும் என்று கூறினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, ஜெயலலிதா மற்றும் அவரது இலவசத் திட்டங்களை எள்ளி நகையாடி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் படம் பார்க்கவில்லை. படம் குறித்து கேள்விபட்டதற்கே கொந்தளித்து விட்டோம். சர்கார் படத்தில் ஜெயலலிதா தொடர்பான காட்சிகளையும், வசனங்களை உடனே நீக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் படம் முடக்கப்படும்.

தமிழக அரசு கொடுத்த இலவசங்களை எரித்து மக்களிடம் வன்முறையைத் தூண்டுகின்றனர். எனவே மதுரையில் ஒரு திரையரங்கில் கூட சர்கார் படத்தை திரையிட விட மாட்டோம் என்று எச்சரித்தனர்.

இதேபோல் கோவை சாந்தி திரையரங்கு முன்பு கூடிய அதிமுகவினர், ‘சர்கார்’ படத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் சர்கார் போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்