ஆப்நகரம்

Nerkonda Paarvai: 24 மணி நேரத்தில் விஜய்யின் சாதனையை முறியடித்த தல!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் 4ஆவது சிங்கிள் டிராக் அகலாதே வெளியாகி சமூக வலைதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 9:27 pm
இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீக்கில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில், அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Samayam Tamil Singapenney


இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 4ஆவது சிங்கிள் டிராக் அகலாதே பாடல் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. தற்போது வரை அந்தப் பாடலை யூடியூப்பில், 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 2.36 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 15 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டியர் காம்ரேட் சினிமா விமர்சனம்!
இது ஒருபுறம் இருக்க, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தில் முதல் சிங்கிள் டிராக் சிங்கப்பெண்ணே கடந்த 23ம் தேதி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் லீக்கானது. எனினும், இந்தப் பாடல் வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் 40 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால், தற்போது வரை இந்தப் பாடலை யூடியூப்பில் 63 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 6.81 லட்சம் பேர் லைக்ஸூம், 38 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அந்த 22 நிமிடங்கள் எதற்கு?
அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா, வர்ஷா போலம்மா, ஜாக்கி ஷ்ரூப் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Jackpot: கபாலி ஸ்டைலில் ஜாக்பாட்: வைரலாகும் கோட்டையில் நம்ம கொடி பறக்குதா பாடல்!
சிங்கப்பெண்ணே பாடலுக்கு பின் 2 நாட்கள் கழித்து வெளியான, அஜித்தின் அகலாதே பாடலை 24 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம், படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின்சாதனையை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை முறியடித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்