ஆப்நகரம்

Thala Ajith: 7ஆவது முறையாக கூட்டணி: தல – யுவன் காம்பினேசனில் வந்த பக்கா மாஸ் பாடல்கள்!

தல அஜித் படங்களில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இசையில் வந்த படங்களில் ஹிட் பாடல்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 7 Aug 2019, 10:15 am
Samayam Tamil paarvai
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். தன்னம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, சினிமாவில் சாதனை படைத்து வருகிறார். அனைவரும் இவரை ’தல’ என்றே அழைத்து வருகின்றனர். இந்தாண்டு ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலோடு விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடங்கினார் தல அஜித். இப்படத்தைத் தொடர்ந்து, சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத், அஜித்தின் 59வது படமாக நேர்கொண்ட பார்வை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இவர், தயாரித்துள்ள முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி ஆகியோரது நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து 7ஆவது முறையாக அஜித் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Also Read: 2019ம் ஆண்டின் சிறப்பான படம்: வேற லெவல் மாஸ்: நேர்கொண்ட பார்வை விமர்சனம்!


இந்த நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களுக்கு என்று சிறப்பான காட்சி காண்பிக்கப்பட்டது. இப்படத்தைப் பார்த்த பலரும் அஜித்தின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர். அதோடு, படத்திற்கும் 5க்கு 4.5 வரை மதிப்பீடு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் வரும் 8ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், அஜித் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வந்த படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.

நேர்கொண்ட பார்வை:

இந்த நிலையில், தான் 7ஆவது முறையாக அஜித் – யுவன் கூட்டணியில் வந்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது. இதோ அந்த பாடல்கள் உங்களுக்காக…

Also Read: கோர்ட்டில் பின்னி பெடலெடுத்த தல: வேதனையை சாதனையாக்கும் நேர்கொண்ட பார்வை!


தீனா:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த இப்படத்தில் யுவன் இசையில், எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலும், பவதாரினி, மகாலட்சுமி பாடிய நீ இல்லை என்றால் என்ற பாடலும் மாஸ் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.


பில்லா


இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் யுவன் கூட்டணியில் உருவான இப்படத்தில் மை நேம் இஸ் பில்லா, சேவல் கோடி, வெத்தலைய போட்டேன்டி ஆகிய பாடல்கள் மாஸ் பாடல்களாக அமைந்துள்ளன.

Also Read: Thala Ajith: இதுவரை பார்த்திராத தல அஜித்: நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்!

ஏகன்

ராஜூ சுந்தரம் ஏகன் படத்தை இயக்கினார். இப்படத்திலுள்ள ஓடும் வரை வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே என்ற பாடல் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக அமைந்தது.

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் விளையாடு மங்காத்தா என்ற பாடல் மட்டுமல்ல இப்பாடலில் அஜித்தின் டான்ஸூம் மாஸ் தான்.


பில்லா 2

சக்ரி டோலட்டி இயக்கத்தில் வந்த இப்படத்தில் மதுரை பொண்ணு என்ற பாடல் மாஸான பாடலாக அமைந்துள்ளது.

ஆரம்பம்

இப்படத்தில் வரும் அடடா ஆரம்பமே, ஸ்டைலிஷ் தமிழச்சி ஆகிய பாடல்கள் மாஸ் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்