ஆப்நகரம்

புதுப்பொலிவுடன் மீண்டும் களமிறங்கும் நடிகை அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா, புதுப்பொலிவுடன் நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவில் களமிறங்குகிறார்.

Samayam Tamil 1 Jun 2018, 4:59 pm
நடிகை அனுஷ்கா, புதுப்பொலிவுடன் நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவில் களமிறங்குகிறார்.
Samayam Tamil anushka


நடிகை அனுஷ்கா, ‘பாகுபலி 2’ படத்துக்குப்பின் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக கூட்டிய உடல் எடையை குறைக்க சிரமப்பட்டார். சில வருடங்களாக அதைக் குறைக்கவே முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டார்.

அவர் யோகா டீச்சராக இருந்தும் அவரால் குறைக்க முடியவில்லை. கடைசியாக ‘பாகுபலி 2’ மற்றும் ‘பாகமதி’ என இரண்டு படங்கள் வெளியானது. இதில், ‘பாகுபலி 2’வில் கிராபிக்ஸ் மூலம் அவரது எடையைக் குறைத்துக் காண்பித்தனர் என்று கூறப்பட்டது.

பெருத்த உடலால் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தவர் நடிகை அனுஷ்கா. தீவிர முயற்சிக்குப் பின் தனது உடல் எடையை குறைத்துவிட்டார் அனுஷ்கா. எனவே, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக பலரிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஜெயேந்திரா சொன்ன கதை பிடித்துப் போனதால் அவர் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிகர் கோபிசந்த் நடிக்கிறார். இந்தப் படம் தெலுங்கில் உருவாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்