ஆப்நகரம்

பரணியைப் போன்று ஒதுக்கப்படும் ஓவியா? வெளியேற்றத் துடிக்கும் பிக்பாஸ் குடும்பம்!

பரணியைப் போன்று பிக்பாஸ் குடும்பத்தில் ஓவியாவும் மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு வருகிறார்.

TNN 21 Jul 2017, 5:51 pm
பரணியைப் போன்று பிக்பாஸ் குடும்பத்தில் ஓவியாவும் மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு வருகிறார்.
Samayam Tamil after bharani biggboss tamil familys target oviya and she will be next eviction list
பரணியைப் போன்று ஒதுக்கப்படும் ஓவியா? வெளியேற்றத் துடிக்கும் பிக்பாஸ் குடும்பம்!


பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தனக்கு தோன்றுவதை பேசியும், செய்தும் வருகிறார் ஓவியா. ஜூலியைப் போன்று ஓவியாவுக்கும் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி, நமீதா, ஓவியா ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தற்போது இந்த கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதனடிப்படையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் உள்ள 10 பேரில் ஓவியாவைத் தவிர மற்ற அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளனர்.

அதில், ஓவியா சிலரைத் தூண்டிவிட்டு சண்டையை உருவாக்குகிறார் என்றும், ஒன்று ஓவியா நிகழ்ச்சியில் இருக்க வேண்டும், அல்லது நாங்கள் வெளியேறுகிறோம் என்றும் சக்தி கூறுவதும், அனைவரும் வெறுக்கும் ஒருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜூலி சொல்வதும் விளம்பரத்தில் காண்பிக்கப்படுகிறது. மேலும், தனிமையில் இருக்கும் ஓவியா அழுவதும் விளம்பரத்தில் காண்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக சமூக வலைதளத்தில் உள்ள ஓவியா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு விளம்பரத்தின் போது ஓவியா, காயத்ரி இடையேயான மோதலும் காண்பிக்கப்படுகிறது.



இதே போன்று தான் பரணியும் பிக்பாஸ் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்த நிலைமை தற்போது ஓவியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓவியாவும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. எப்படி இருந்தாலும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலிக்கு சாதகமாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பரணி வெளியேறியதற்கு ஜூலி தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஓவியா வெளியேறவும் அவர் தான் காரணமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்