ஆப்நகரம்

Darbar: ரஜினியை மயக்கிய அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்!!

தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வேகமாக வெளியாகி வருகிறது.

Samayam Tamil 19 Jul 2019, 12:33 pm
பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம் “தர்பார். இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆவார் என்ற கனவுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு போர் வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி ரசிகர்கள் மனதில் குழப்பத்தை விளைவித்தார் ரஜினிகாந்த். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்த ரசிகர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. அது அரசியலைப் பற்றியதல்ல சினிமாவைப் பற்றி.
Samayam Tamil petta


ரஜினிக்கே ரெட் கார்டு போட்ட ஒன்னா நம்பர் விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார் என்ற படத்தில் தற்பொழுது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து அவர் எந்த இயக்குநருடன் இணைய உள்ளார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், “கபாலி, காலா படத்தை இயக்கிய பா.ரஞ்சித், “முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார் இவர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

Verithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்!

இவர்களுடன் தற்பொழுது அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவும் சேர்ந்துள்ளார். சிறுத்தை சிவா கடந்த மே மாதத்தில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். விஸ்வாசம் படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் சூப்பர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக கூறப்பட்டது.

Vikram: டுவிட்டரை அலறவிட்ட சியான் ரசிகர்கள்: கடாரம் கொண்டான் படத்தின் ஆக்ஷனுக்கு கிடைத்த அமோக வரவேற்பு!

அதைத்தொடர்ந்து இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ரஜினிகாந்த் வட்டாரத்தில் கூறப்பட்டது. நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்த சிவா, சூப்பர் ஸ்டாருக்கும் ஸ்கிரிப்ட் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.அதனால் ரஜினிகாந்தின் படத்துக்கு பின் சூர்யாவின் படத்தை இயக்க சிவா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தர்பார் படப்பிடிப்பு முடிந்தவுடன் சில நாட்களிலேயே ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலகள் விரைவில் வெளிவருமென தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்