ஆப்நகரம்

கார்த்தியின் வெற்றிக்கு கை கொடுத்த தீரன் அதிகாரம் ஒன்று!

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார்.

TNN 21 Nov 2017, 3:44 pm
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார்.
Samayam Tamil after failure movies karthi gives big success in this theeran adhigaaram ondru
கார்த்தியின் வெற்றிக்கு கை கொடுத்த தீரன் அதிகாரம் ஒன்று!


பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, சிறுத்தை, பையா, தோழா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பதினைந்து படங்களில் நடித்துள்ளார். வெற்றி, தோல்வி என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கார்த்திக்கு, கடைசியாக வெளியான காஷ்மோரா மற்றும் காற்று வெளியிடை ஆகிய இரு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன.

இதன் காரணமாக கார்த்தி ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை தீரன் அதிகாரம் ஒன்று படம் தீர்த்து வைத்துள்ளது. வினோத் இயக்கத்தில், வெளிவந்த இப்படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கின் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்