ஆப்நகரம்

அங்காடி தெரு பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால், ‘அங்காடி தெரு படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 10 Apr 2019, 6:39 pm
நடிகர் விஷ்ணு விஷால், ‘அங்காடி தெரு படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil vishnu


வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் வசந்தபாலன். இந்தப் படத்தில் பரத், பாவனா, பசுபதி உட்பட பலர் நடித்திருந்தனர். அதையடுத்து நடிகை அஞ்சலியை வைத்து ‘அங்காடி தெரு என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.தற்போதுஜி.வி. பிரகாஷை வைத்து ‘ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து ஒரு புதிய படமொன்றை இயக்க இருக்கிறார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்