ஆப்நகரம்

தல 60 படத்திற்காக தயாராகி வரும் அஜித்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் தல60 படத்திற்காக தயாராகி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Aug 2019, 12:29 pm
தல என்ற ஒரு சொல்லுக்கு தலைவணங்கும் ரசிகர்கள் ஏராளம். உலகம் முழுவதும் அஜித்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவைத் தவிர வேறு புகைப்பட கலைஞர், சமையல் வல்லுனர், பைக் ரேஸர், விமானம் வடிவமைப்பாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் அஜித். இந்த ஆண்டை விஸ்வாசம் படத்தின் மூலம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். ஆம், உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளது.
Samayam Tamil AK 60


இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வந்த படம் நேர்கொண்ட பார்வை. உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஹிட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது.

Also Read This: அனுபமாவுடன் ரொமான்ஸ் செய்யத் தயங்கிய அதர்வா!

மேலும் படிக்க: ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

இதையும் படிங்க: Aamir Khan: அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?


சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்து அஜித்திற்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த படங்களாக பார்க்கப்பட்டது.


நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தல60 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காகத் தான் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் என்றும் அண்மையில் செய்தி வெளியாகி வருகிறது.

அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ரேஷ்மா பசுபுலேதி நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அடுத்த செய்தி

டிரெண்டிங்