ஆப்நகரம்

Saaho: வெளிநாட்டை சேர்ந்த பெண்ணுடன் பிரபாஸ்க்கு திருமணம்?

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படம் இந்த மாதம் இறுதியில் வெளியானதும், அவர் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Aug 2019, 12:42 pm
“ஈஸ்வர்” படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பிரபாஸ். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருகிறார். இவர் நடித்த “பாகுபலி” திரைப்படம் உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்தது.
Samayam Tamil pra


தற்போது இவர் “சாஹோ” என்ற படத்தில் நடித்துள்ளார். இம்மாதம் இறுதியில் வெளியாகும் இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண்விஜய், நீல்நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரமாண்டமாக ஷீட் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 30 அன்று வெளிவர இருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படம் வெளியானபிறகு பிரபாஸ் திருமணம் செய்துகொள்வார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: Bigil Verithanam Song: ஹெல்மெட் இல்லாமல் வெறித்தனமா பைக் ரைடு செய்த தளபதி விஜய்யின் பிகில் வீடியோ!

சில வருடங்களுக்கு முன்பு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று வதந்தி பரவி வந்தது. பின்னர் அவர்கள் இருவருமே அந்த செய்தியை மறுத்து விட்டனர். நடிகை தமன்னாவுடன் காதல் என்றும் ஒரு கிசுகிசு பரவியது. இதைத்தொடர்ந்து வேறுசில பெண்களின் புகைப்படங்கள் வெளியாகி அவர்களில் ஒருவரைத்தான் பிரபாஸ் மணக்கப்போவதாக செய்திகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: Nerkonda Paarvai: அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை வெளியாகும் தியேட்டர் லிஸ்ட்!

தற்போது இவை அனைத்தும் பொய் என்று நிரூபணம் ஆகவுள்ளது. ஆம் பிரபாஸிற்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் என்று அவரது வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சாஹோ படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபாஸுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி பரவி வருகிறது. பிரபாஸின் மாமா மற்றும் சகோதரியும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பிரபாஸுக்கு 39 வயது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மோஸ்ட் சிங்கிள் என்று புகழப்படுபவர் பிரபாஸ். இப்போது அவருக்கு திருமண்ம நடக்க உள்ளது.

Also Read: Suriya: சூர்யாவுக்கு புதிய சிக்கல்? ரிலீஸிலிருந்து பின் வாங்கிய காப்பான்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்