ஆப்நகரம்

Comali: கோமாளிக்கு இப்படியொரு வரவேற்பா? ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடிய ஜெயம் ரவி!

டிக் டிக் டிக் மற்றும் அடங்க மறு ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கோமாளி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜெயம் ரவி தனது ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 16 Aug 2019, 10:35 am
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் வரிசையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்தார்.
Samayam Tamil Comali Jayam Ravi


இப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றுக் கொடுத்தது. இதே போன்று பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெனிலியா உடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திற்கு விஜய் விருது மற்றும் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். தொடர்ந்து பேராண்மை படத்திற்கும் விஜய் விருது மற்றும் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அப்போது இந்தப் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான எடிசன் விருது கிடைத்தது.

Also Read: BIGIL Tree Planting Challenge: மரக்கன்றுகள் நட்டு வைத்து விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!


இப்படங்களைத் தொடர்ந்து ரோமியோ ஜூலியட் படம் காதலர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படமாக அமைந்தது. இந்த நிலையில் தான் இவரது சகோதரர் இயக்கத்தில் போலீஸ் கதையை மையப்படுத்தி வந்த தனி ஒருவன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான எடிசன் விருது, சைமா விருது (விமர்சகர்கள்), பிலிம்பேர் விருது (விமர்சகர்கள்), ஐஐஎஃப்ஏ உட்சவம் விருது ஆகிய விருதுகளை பெற்றார்.

Also Read: SIIMA 2019 விருதுகள் வழங்கும் விழா: தோஹாவில் கோலாகலமாக தொடக்கம்..!

ஆனால், அதன் பிறகு வந்த படங்கள் போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில், தான் முதல் விண்வெளி படமான டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து மாற்பட்ட போலீஸ் கதாபாத்திர கதை கொண்ட அடங்கமறு படத்தில் நடித்தார். இப்படமும், தாறுமாறாக வரவேற்பு பெற்றது. இந்த இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 3ஆவதாக ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் வகையில், இவரது கோமாளி படம் அமைந்துள்ளது.


அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் கோமாளி. 16 வருடம் கோமாவில் இருந்த ஒருவர் நடப்பு காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறார், 16 வருடத்தில் தான் என்னவெல்லாம் இழந்துள்ளார் என்பதையும் திரும்பி பார்க்க வைக்கும் கதையை மையப்படுத்தியே இப்படத்தின் கதை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திருநங்கைகளுக்காக சொன்னதை செய்த விஜய் சேதுபதி!!

டிக் டிக் டிக், அடங்கமறு ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கோமாளி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படக்குழுவினருடன் கோமாளி படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்