ஆப்நகரம்

Thotti Jaya 2 Sequel: ‘தொட்டி ஜெயா’ 2ம் பாகத்தில் நடிகர் சிம்பு!

நடிகர் சிம்பு, ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 6 May 2019, 4:10 pm
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரீமேக் படம் ‘வந்தா ராஜாவாக தான் வருவேன்’. இந்தப் படம் படுதோல்வியடைந்தது. அடுத்ததாக இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கியபாடு இல்லை.
Samayam Tamil thotti-jaya-2


இந்த நிலையில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘முப்ஃடி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். மேலும் ‘கோவில்’ பட கூட்டணியான ஹரியுடன் ஒரு படத்திலும், அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அது சிம்புவும் கோபிகாவும் இணைந்து நடித்து, 2005ல் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சிம்பு. இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய வி.இசட்.துரை இயக்க இருக்கிறார், விரைவில் இந்த படம் தொடங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்