ஆப்நகரம்

5வது முறையாக சிவா – தல அஜித் கூட்டணியில் புதிய படம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Nov 2018, 5:30 pm
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil thala


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து அதனை ஹிட்டாக்கியும் வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.

இதற்கிடையில், 5வது முறையாக தல அஜித் சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கயிருக்கிறது.

இந்த இடைவெளியில், தல அஜித் பாலிவுட்டில் வெற்றி கொடுத்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கயிருக்கிறாராம். இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கயிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும், இப்படம் குறித்து வினோத் மற்றும் தல அஜித் இருவரும் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை நேரில் சந்தித்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தல அஜித் – ஸ்ரீதேவி ஆகியோர் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்