ஆப்நகரம்

42 வயதில் ஒர்க்அவுட் பண்ணும் சுஷ்மிதா சென்!

42 வயதான நடிகை சுஷ்மிதா சென், ஜிம்மில் ஒர்க்அவுட் பண்ணும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு தற்போது எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்பி வருகிறார்.

Samayam Tamil 8 Feb 2018, 4:43 pm
42 வயதான நடிகை சுஷ்மிதா சென், ஜிம்மில் ஒர்க்அவுட் பண்ணும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு தற்போது எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்பி வருகிறார்.
Samayam Tamil age doesnt a matter sushmita sen still maintaining fitness
42 வயதில் ஒர்க்அவுட் பண்ணும் சுஷ்மிதா சென்!


பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். பின்னர் இந்திய சினிமாவில் நடிகையாக ஜொலித்தார். இவர் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இவர் தனது உடம்பை எப்போதும் பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல பயிற்சிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அடிக்கடி பேஷன் ஷோக்களில் தலைகாட்டி வருகிறார்.


இந்நிலையில் சுஷ்மிதா சென் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் ஜிம்னாஸ்டிக் ரிங்கில் நன்றாக வளைந்து தலைகீழாக உடற்பயிற்சி செய்வதை காட்டியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்