ஆப்நகரம்

Agni Devi Row :வடிவேலுவை தொடர்ந்து பாபி சிம்ஹாவுக்கு நடிக்க தடை... வட போச்சே

நடிகர் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2019, 6:25 pm
நடிகர் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Samayam Tamil Bobby Simha


நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகை மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அக்னி v தேவி படம் கடந்த வாரம் ரீலீஸ் ஆனது. இந்த படத்தை ஜோசப் ஸ்டாலின் தயாரித்தார்.

இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா, நடுவில் தயாரிப்பு நிறுவனத்தோடு கருத்து வேறு ஏற்பட்டது. இதனால் திடீரென படத்தின் பாதியிலேயே விலகினார். இதையடுத்து படத்தை முடிப்பதற்காக பாபி சிம்ஹா போல டூப் மற்றும் விஎப்எக்ஸ் உதவியுடன் முடிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த படம் திரைக்கு வந்தது. படத்தை பார்த்து பாபி சிம்ஹா அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து பாபி சிம்ஹா காவல் துறையிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் புகாரை திரும்ப பெற வற்புறுத்தியது. ஆனால் முடியாது என பாபி சிம்ஹா தெரிவித்துவிட்டார். இதையடுத்து பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடப்பட்டது.

இதனால் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க இடைக்கால தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடிவேலு மாதிரி:

முன்னதாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் சம்பள பிரச்னை காரணமாக வடிவேலு படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதையடுத்து பல பிரச்னையின் முடிவில், வடிவேலு தொடர்ந்து நடிக்க தடை வித்தது நினைவிருக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்