ஆப்நகரம்

விஜய் & அட்லி இணையும் படத்தை உறுதி செய்த ஏஜிஎஸ்!

விஜய் & அட்லி மீண்டும் இணையும் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தற்போது உறுதிபடுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Aug 2018, 2:35 am
சென்னை: விஜய் & அட்லி மீண்டும் இணையும் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தற்போது உறுதிபடுத்தியுள்ளது.
Samayam Tamil Vijay-atlee


நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்க்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லியுடன் இணையவுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. மேலும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஏதாவது ஒன்று தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இந்த படத்தை யார் தயாரிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விஜய் & அட்லி இணையும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது.

இது குறித்த முக்கிய அறிவிப்பு வரும் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. அன்று படத்தின் தலைப்பு மற்றும் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AGS Entertainment confirms Vijay, Atlee new movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்