ஆப்நகரம்

Vijay: பிகில் படத்திற்காக சென்னையின் எஃப்சி அணியுடன் இணைந்த ஏஜிஎஸ்!

வரும் 25 ஆம் தேதி பிகில் வெளியாகவுள்ள நிலையில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னையின் எஃப்சி அணியுடன் இணைந்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 5:35 pm
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியன் சூப்பர் லீக் சென்னையின் எஃப்சி அணி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் பிகில் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு உன்னதமான தொடர்பை அறிவித்துள்ளது.
Samayam Tamil Chennaiyin FC


ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி உடன் பிகில் படத்திற்காக இணைவது குறித்து சென்னையின் எஃப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் ஜார்ஜ், லோக்கல் பிளேயர் தனபால் கணேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஜெர்சியை வெளியிட்டனர். ஒன்றில் சென்னையின் எஃப்சி என்றும், மற்றொன்றில் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூடிய பிகில் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.


சென்னையின் எஃப்சி அணியுடன் இணைந்தது குறித்து ஐஸ்வர்யா கல்பாத்தி கூறுகையில், சென்னையின் எஃபிசி அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிகில் படம் முழுக்க முழுக்க கால்பந்து மற்றும் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த கால்பந்து விளையாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதோடு, அடிமட்டத்தில் இருக்கும் ரசிகர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்த கூட்டணி உதவும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னையின் எஃப்சி அணியின் துணைத் தலைவர் ஹிரென் மோடி கூறுகையில், இரண்டு முறை சாம்பியன்கள் மற்றும் மாநிலத்தில் கால்பந்து கொடியை நிலைநாட்டியவர்கள் என்ற வகையில், ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய பிகில் படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இது கால்பந்து விளையாட்டுக்கு என்று அதிக ரசிகர்களையும், பார்வையாளர்களையும் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக சென்னையின் எஃப்சி மற்றும் இகேமிங் நிறுவனமான ஸ்கைஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து சென்னை மற்றும் கொச்சியில் பிகில் ஃபிஃபா சாம்பியன்ஷிப்பை நடத்துகின்றன. இந்த போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள இஸ்பஹனி மையத்தில் நடக்க இருக்கிறது. இதற்கு ரூ.50 ஆயிரம் வரை பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி பிகில் புரோமோஷனுக்காக சென்னையின் எஃப்சி சாக்கர் பள்ளி குழுந்தைகளை பிகில் படக்குழுவினர் சந்தித்து பேசுகின்றனர். இறுதியாக, அர்ச்சனா கல்பாத்தி தங்களது பெண்கள் கால்பந்து குழுவினருடன் இணைந்து வரும் 27 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மும்பையின் எஃப்சி அணிக்கும், சென்னையின் எஃப்சி அணிக்கும் நடக்க இருக்கும் போட்டியை காண இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்