ஆப்நகரம்

பப்ஜி படத்தில் நிர்வாணமாக நடித்த பிக் பாஸின் செல்லக்குட்டி

பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

Samayam Tamil 3 Feb 2020, 2:45 pm
பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.
Samayam Tamil aishwarya dutta bares it all for pubg
பப்ஜி படத்தில் நிர்வாணமாக நடித்த பிக் பாஸின் செல்லக்குட்டி


ஐஸ்வர்யா தத்தா

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. ஒவ்வொரு வாரமும் அவரை வெளியேற்ற பார்வையாளர்கள் ஓட்டு போட பிக் பாஸோ தொடர்ந்து கள்ளாட்டம் ஆடி அவரை காப்பாற்றினார். இதனால் ஐஸ்வர்யா தத்தாவை பிக் பாஸின் செல்லக்குட்டி என்று கூறி பார்வையாளர்கள் கிண்டல் செய்தார்கள். அந்த செல்லக்குட்டி தற்போது பப்ஜி படத்தில் நடித்து வருகிறது.

பப்ஜி

பப்ஜி என்றால் பொல்லாத உலகில் பயங்கர மேம் என்பதாகும். கமல் ஹாஸனின் அண்ணன் சாரு ஹாஸனை வைத்து தாதா 87 படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த விஜய் ஸ்ரீ தான் பப்ஜி படத்தை இயக்கி வருகிறார். குரோம்பேட்டை அருகில் உள்ள பழைய ஃபேக்டரியில் அண்மையில் ஷூட்டிங் நடந்துள்ளது. மேலும் முக்கிய காட்சி ஒன்றை காவல் நிலையத்தில் படமாக்கியுள்ளனர்.

ஆடையில்லா காட்சி

பப்ஜி படத்தில் வரும் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ஆடையில்லாமல் நடித்த காட்சியை வெள்ளிக்கிழமை படமாக்கியுள்ளார்கள். கதைக்கு தேவைப்படுகிறது என்று இயக்குநர் தெரிவிக்க ஐஸ்வர்யாவோ உடனே சம்மதித்துவிட்டாராம். ஐஸ்வர்யா துணிச்சலாக நடித்த காட்சி நல்லபடியாக வந்துள்ளதாம்.

ஜூலி

பப்ஜி படத்தில் மேலும் ஒரு பிக் பாஸ் பிரபலாமன நம்ம ஜூலி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ், ஜூலி தவிர்த்து மொட்டை ராஜேந்திரன், அனிதா நாயர், சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். முன்னதாக ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து அனைவரையும் அதிர வைத்தார். ஆனால் அவர் அப்படி நடித்ததை பார்த்த பல இயக்குநர்கள் அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்கத் தயங்குகிறார்கள். இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்