ஆப்நகரம்

மங்களூரு மாமாவை இழந்த ஐஸ்வர்யா ராய்- குடும்பத்துடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

மங்களூரு: நடிகை ஐஸ்வர்யா ராயின் சொந்த மாமா மங்களூருவில் காலமானார். கணவர் மற்றும் குடும்பத்துடன் இறுதிச் சடங்கில் எளிமையாக பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்.

Samayam Tamil 25 Feb 2019, 7:25 pm
மங்களூருவில் வசித்து வந்த சொந்த மாமா மரணம் அடைந்த நிலையில், அதை தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சடங்கு பூஜையில் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
Samayam Tamil மங்களூருவில் ஐஸ்வர்யா ராயின் மாமா மரணம்- எளிமையாக நடந்த இறுதிச் சடங்கு


1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு தமிழில் தயாரான ‘இருவர்’ படம் மூலம் சினிமா உலகில் கால்பதித்தார். இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அவரால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.

தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், 2007ம் ஆண்டில் சக நடிகரான அபிஷேக் பச்சனை கரம் பிடித்தார். பிறகு நடிப்பிற்கான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.


இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் தாயார் விருந்தா ராயின் சொந்த சகோதரரான தினானந்த் அண்மையில் காலமானார். கடந்த 24ம் தேதி மங்களூருவில் உள்ள பிரபல மஞ்சுநாதேஸ்வரா கோயில் மண்டபத்தில் அவருக்கான இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சனுடன் பங்கேற்றார்.

மங்களூருவில் நவம்பர் 1, 1973ம் ஆண்டு, துளூ மொழிப் பேசும் குடும்பத்தில் பிறந்தார் ஐஸ்வர்யா ராய். அதை தொடர்ந்து மும்பையில் வளர்ந்து வந்தாலும், வீட்டில் துளூ மொழி பேசியே வளர்ந்தார். நடிகையாக கோலோச்சிய போதும், கர்நாடகாவுக்கு வரும் போதும் துளூ பேசுவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் திருமணத்தை தொடர்ந்து, தனது குடும்ப வழி உறவுகளுடனும், அவர் சார்ந்துள்ள சமூக நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா ராய் அதிகமாக பங்கெடுத்து வருகிறார். இதை காணும் துளூ பேசும் மக்களும், சமூகவலைதளங்களில் புகைப்படங்கள், காணொளியை டிரெண்டாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்