ஆப்நகரம்

Aishwarya Rajinikanth: 2 குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய ஐஸ்வர்யா: தலைவர் மாதிரியே க்யூட் ஸ்மைல்

Aishwarya Rajinikanth's lal salaam: தன் இரண்டு குடும்பத்தாருடனும் சேர்ந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 16 Apr 2023, 1:53 pm
Aishwarya Rajinikanth Insta post: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ ரொம்ப கருத்திட்டீங்களே என தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil aishwarya rajinikanth celebrates tamil new year with both families
Aishwarya Rajinikanth: 2 குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய ஐஸ்வர்யா: தலைவர் மாதிரியே க்யூட் ஸ்மைல்


​ஐஸ்வர்யா​

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் தமிழ் புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, என் உலகம். என் வேலை குடும்பம்... நம் வாழ்வுகள் தான் நம் ஸ்மைலை தீர்மானிக்கிறது என தெரிவித்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் யாத்ராவும், லிங்காவும் இருக்கிறார்கள்.

கொண்டாட்டம்

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

​தனுஷ்​

ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, அண்ணி தனுஷ் அண்ணா எங்கே?. அவரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக கேள்விப்பட்டோம். ரொம்ப சந்தோஷம். உடன் வேலை செய்பவர்களை குடும்பத்தாராக பார்க்கும் உங்களின் குணமே குணம் என தெரிவித்துள்ளனர்.

​ரஜினி​

ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது, உங்களின் சிரிப்பை பார்க்கும்போது அப்படியே தலைவரின் சிரிப்பு போன்று இருக்கிறது. அவுட்டோர் ஷூட்டிங் அதிகமோ. ரொம்ப வெயிலில் வேலை செய்கிறீர்கள் போன்று. ரொம்ப கருத்திட்டீங்களே. தலைவரை கேட்டதாக சொல்லவும். லால் சலாம் படம் வெற்றி பெற வாழ்த்த்துக்கள் என மனதார வாழ்த்தியுள்ளனர்.

​லால் சலாம்​

Rajinikanth: என்னாது, மூத்த மகளுக்காக முஸ்லீமா மாறிட்டாரா ரஜினி?: பரபரக்கும் கோலிவுட்

மகன்கள் வளரட்டும் என வீட்டோடு இருந்த ஐஸ்வர்யா பல ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வரும் அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் ரஜினிகாந்த். கவுரவத் தோற்றம் என்றாலும் அவரை படத்தில் ஒரு மணிநேரம் பார்க்கலாமாம். மகளுக்காக இஸ்லாமியராக நடிக்கிறார். ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார்.


​மகிழ்ச்சி​

லால் சலாம் படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அது தொடர்பாகத் தான் இன்ஸ்டாகிராமில் அதிகம் போஸ்ட் போட்டு வருகிறார். மேலும் இன்ஸ்டா ஸ்டோரீஸிலும் லால் சலாம் புகைப்படங்கள்,வீடியோக்கள் தான். வேலை மூலம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அந்த சந்தோஷத்தை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

​திருமண வாழ்க்கை​

ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் சேர்ந்து வாழ அவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் தயாரிக்கிறார்.

Dhanush: மீண்டும் சேரும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?: சந்தோஷத்தில் ரசிகர்கள்

​தயாரிப்பு​

கர்ணனுக்கு பிறகு தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் படத்தை தன் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் தனுஷ். ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் தான் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த முதல் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush: 4 வருஷம் கழிச்சு குட் நியூஸ் சொன்ன தனுஷ்: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்


எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்