ஆப்நகரம்

தனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 26 Mar 2022, 7:28 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரையே வைத்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்கி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியளித்தார்.
Samayam Tamil Aishwarya Rajinikanth
Aishwarya Rajinikanth


தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.

தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இதனால் இருவரும் மீண்டும் சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
போட்டோ போட்டு கன்பார்ம் பண்ணிய ஆதி - நிக்கி கல்ராணி: ரீல் டூ ரியல் ஜோடி..!
இந்நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டரில் தனக்கு பின்னாடி இருந்த தனுஷ் பெயரை நீக்கி, தனது தந்தை ரஜினிகாந்த் பெயரை இணைத்தார் ஐஸ்வர்யா. அதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனுஷ் பெயரை நீக்கினார். அவரின் இந்த செயல்பாடு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

Aishwarya Instagram


இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது தனுஷின் அண்ணன் மனைவி செல்வராகவன் கீதாஞ்சலியுடன் இருப்பதை போன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் பெயரை நீக்கிவிட்டு அவரின் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா நெருக்கம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்