ஆப்நகரம்

சம்பளத்தை குறைத்துக் கொண்ட கோப்ரா இயக்குனர்.. எத்தனை கோடி தெரியுமா?

விக்ரமின் கோப்ரா படத்திற்காக இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 3 Jul 2020, 6:06 pm
கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் தற்போது நடித்து வரும் படம் கோப்ரா. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இதற்கு முன்பு டிமான்டி காலனி இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கியவர் தான் இவர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அது கொரோனா முழு அடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
Samayam Tamil Ajay Gnanamuthu reduces his salary for Cobra


தொடர்ந்து பல மாதங்களாக ஷூட்டிங் பாதிக்கப் பட்டுள்ளதால் தயாரிப்பாளருக்கு தொடர்ந்து அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்தில் 40 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இது சுமார் ஒன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய படங்கள் அனைத்திலும் 25% சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்தார். அது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன் பிறகு ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

அந்த வரிசையில் தற்போது அஜய் ஞானமுத்து இணைந்துள்ளார். சினிமா துரை முற்றிலும் முடங்கி உள்ளதால் பைனான்ஸ் வாங்கி படத்தில் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பலரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என கூறப்படும் நிலையில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதை ஏற்று தான் இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் viacom18 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கும் கோப்ரா படத்தின் சூட்டிங் சென்ற வருடம் ஆகஸ்டில் துவங்கியது. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் ரிலீஸ் செய்துவிடலாம் என தயாரிப்பாளர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் பிரச்சனை வெடித்து சினிமா துறையை முற்றிலும் முடக்கி விட்டது. அதனால் இந்த வருடத்தில் ரிலீஸ் செய்வது சாத்தியமில்லாத ஒன்று என்று கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராவணன், ஐ ஆகிய படங்களுக்குப் பிறகு விக்ரமுக்கு அவரை இசை அமைப்பது இது மூன்றாவது முறை.

கோப்ரா படத்தில் முக்கிய ரோலில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் இர்பன் பதான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கோப்ரா மட்டும் இன்றி விக்ரம் தன் கைவசம் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 ஆகிய படங்களை வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. சீயான் 60 படத்திற்காக ஸ்கிரிப்ட் பணியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்