ஆப்நகரம்

“2.0 படப்பிடிப்பு நடப்பதால் பிரைவசி இருக்காது” – ஃபீல் பண்ணிய அஜித்!

“2.0 படப்பிடிப்பு நடப்பதால் பிரைவசி இருக்காது” – ஃபீல் பண்ணிய அஜித்!

TOI Contributor 29 Sep 2016, 11:29 am
அஜித்தை வைத்து வீரம், வேதாளம் திரைப்படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தற்போது படத்திற்கு பெயரிடாமல் “தல 57” என்ற பெயரில் அஜித்தை இயக்கிவருகிறார். வேதாளம் மாஸ் ஹிட் ஆனதால் அஜித்தே சிவாவிற்கு மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அடுத்ததாக சென்னையில் உள்ள ஈவிபி பொழுது போக்கு மையத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று இயக்குநர் சிவா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அங்கு 2.0 படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று வருவதால் பிரைவசி இருக்காது என்று அஜித் படப்பிடிப்பு தளத்தை மாற்ற சொல்லியிருக்கிறார். இதனால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர்.
Samayam Tamil ajith asked director siva to change the shooting location from chennai to hyderabad
“2.0 படப்பிடிப்பு நடப்பதால் பிரைவசி இருக்காது” – ஃபீல் பண்ணிய அஜித்!


இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்துவருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தல 57 படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Ajith asked director siva to change the shooting location from Chennai to hyderabad

அடுத்த செய்தி

டிரெண்டிங்