ஆப்நகரம்

அஜீத்தின் குணங்களுக்கு அவரது பெற்றோர்கள்தான் காரணம்: பிரபல இயக்குனர்

அஜீத்திடம் உள்ள நல்ல குணங்களுக்கு அவரது பெற்றோர்கள்தான் காரணம் என்று பிரபல நடிகரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன் கூறியுள்ளார்.

TNN 27 Apr 2017, 4:26 pm
அஜீத்திடம் உள்ள நல்ல குணங்களுக்கு அவரது பெற்றோர்கள்தான் காரணம் என்று பிரபல நடிகரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன் கூறியுள்ளார்.
Samayam Tamil ajith character resposible for his parents says director
அஜீத்தின் குணங்களுக்கு அவரது பெற்றோர்கள்தான் காரணம்: பிரபல இயக்குனர்


அஜீத் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள்.. அவரது பிறந்தநாள் உழைப்பாளர் தினத்தில் வருவது ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல், இவ்வருடம் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் அவர் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் வரப்போகிறது. இதனால் டபுள் கொண்டாட்டத்தில் அஜீத் ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனரும், நடிகருமான சுரேஷ் சந்திர மேனன் அஜீத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘அஜீத் இப்போதும் நான் முதலில் பார்த்தது போலவே இருக்கிறார். என்னுடன் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார், அதோடு என் படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
புகழை தலையில் வைத்துக் கொள்ளாமல் இப்போது சாதாரண மனிதராகவே காட்சியளிக்கிறார். அண்மையில் அவருடைய அம்மா, அப்பாவை சந்தித்து ஆசி பெற்றேன். அஜீத்தின் இந்த குணங்களுக்கு அவரது பெற்றோர்கள்தான் காரணம் என்று அப்போது புரிந்து கொண்டேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்