ஆப்நகரம்

'தல' சொல்லாமலேயே செய்வோம்ல: நல்ல காரியம் செய்த ரசிகர்கள்

அஜித் எதுவும் சொல்லாமலேயே அவரின் ரசிகர்கள் ஒரு நல்ல காரியம் செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Sep 2019, 1:04 pm
சென்னையில் சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.
Samayam Tamil ajith


இந்நிலையில் அஜித் ரசிகர்களோ தல எதுவும் சொல்வதற்கு முன்பே செயலில் இறங்கிவிட்டனர். பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது,

சாலைகளின் பேனர் கவிழ்ந்து சுபஸ்ரீ என்கின்ற சகோதரியின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தல அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தை வாழ்த்த ஊருக்கு முன்பாக பேனர், போஸ்டர்கள் அடிக்கும் மதுரைக்கார ரசிகர்கள் தான் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு பேனர்கள் வைக்கக் கூடாது என்று விஜய் அன்பு கோரிக்கை விடுத்ததால் பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைப்பது இல்லை என்று ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்.

விஜய் தவிர்த்து உலக நாயகன் கமல் ஹாஸன் மற்றும் சூர்யா ஆகியோரும் தங்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளனர். இதற்கிடையே கமல் பேனரால் பலியான சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்