ஆப்நகரம்

தோனியை புகழ்ந்து ட்வீட் போட்ட தனுஷ்: கண்டமேனிக்கு கழுவி ஊற்றும் அஜித் ரசிகர்கள்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டி நடிகர் தனுஷ் பகிர்ந்த ட்வீட் ஒன்று சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2021, 2:23 pm
கார்த்திக் நரேனின் 'மாறன்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இன்று தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
Samayam Tamil Dhanush
Dhanush


இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு 'நானே வருவேன்' படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. பூஜையின் போது படக்குழுவினர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனுஷ் ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனுஷ் பகிர்ந்த ட்வீட் ஒன்று அஜித் ரசிகர்களை கடுப்பாக்க, தனுஷுக்கு எதிராக நெகட்டிவ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை பட தலைப்பாக்கிய உதயநிதி: வைரலாகும் மோஷன் போஸ்டர்!
அந்த வகையில் தனுஷ் போட்ட ட்வீட் ஒன்று அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அதாவது தனது பதிவில் ஒரே ஒரு தல தோனி என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் தனுஷை திட்டி ஹேஸ்டாக் டிரெண்ட் செய்து வருகினறனர். ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித்தை இழிவு செய்யும் விதமாகவே தனுஷ் பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில் 'நானே வருவேன்' அப்டேட் வெளியானதால் குஷியில் இருந்த ரசிகர்கள், தனுஷுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஹேஸ்டாக் டிரெண்ட் செய்வதால் கடுப்பாகியுள்ளனர். இதனால் பதிலுக்கு அஜித்தை ட்ரோல் செய்து பதிவுகள் பகிர்த்து வருகின்றனர். இந்த நிகழ்வால் சோசியல் மீடியாவே தற்போது பரபரப்பாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்