ஆப்நகரம்

‘ஏகே 61’ படத்துல இதெல்லாம் கம்மி... வெளியான மாஸ் தகவல்: குஷியில் ரசிகர்கள்..!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 29 Mar 2022, 5:56 pm
நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் கடந்த மாதம் 'வலிமை' படம் வெளியானது.
Samayam Tamil AK 61
AK 61


கடந்த மாதம் வெளியான 'வலிமை' படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. வலிமையை தொடர்ந்து ‘ஏகே 61’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைய உள்ளனர்.

'ஏகே 61' படத்திற்காக அஜித் ஏற்றுள்ள புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது. 'வலிமை' படத்தில் ட்ரோல் செய்யப்பட்ட அஜித்தின் லுக் பற்றிய விமர்சனத்தை எல்லாம் அடித்து நொறுக்கும்படி புகைப்படங்கள் வெளியானது.

பொண்ணுங்க அதை கட்டுப்படுத்த முடியாது.. காண்டம் வாங்குனா என்ன.?: அக்சரா ஹாசன்..!
இந்நிலையில் 'ஏகே 61' படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீசை குறிவைத்து ஏகே 61 படம் எடுக்கப்பட உள்ளது. மேலும் 'வலிமை' படம் போல் அல்லாமல் இந்தப்படத்தில் மிக குறைந்த ஆக்ஷன் காட்சிகளே வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

'ஏகே 61' படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த வருட இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளனர். அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்