ஆப்நகரம்

Valimai Trailer: வேற லெவல் ஏகே.. தரமான சம்பவம் இருக்கு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'வலிமை' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2021, 6:50 pm
'வலிமை' அப்டேட் இந்த வார்த்தையை கேட்காமல் இந்தாண்டை கடந்தவர்கள் யாரும் இல்லை என சொல்லலாம். அந்தளவிற்கு அஜித் ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் படம் 'வலிமை'. இந்நிலையில் இந்தப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
Samayam Tamil வலிமை
வலிமை


'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் 'வலிமை' படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்கும் வகையில் மிரட்டலாக இருந்தது. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பன்மடங்கு எகிற செய்துள்ளது.

சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: பேனரை கிழித்தெறிந்த போராட்டக்கார்கள்!
இந்நிலையில் 'வலிமை' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேக்கிங் வீடியோவை போல டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. டிரெய்லரில் அஜித்தின் லுக்கும், அவர் பேசியுள்ள வசனமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


'வலிமை' படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, குக்வித் கோமாளி புகழ், கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்