ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஜித் சிறப்பு தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் இன்று சிறப்பு தரிசனம் செய்தார்.

TNN 18 Jul 2017, 1:12 pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் இன்று சிறப்பு தரிசனம் செய்தார்.
Samayam Tamil ajith kumar went to tirupati temple
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஜித் சிறப்பு தரிசனம்!!


பல்கேரியாவில் விவேகம் திரைப்படத்திற்காக தீவிரமான படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார் ஈடிபட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை திரும்பினார்.

திரும்பிய வேகத்தில் விவேகம் படத்திற்கான டப்பிங் வேலைகளில் ஈடுபட்டார். டப்பிங்கையும் மின்னல் வேகத்தில் முடித்தார் என்று செய்தி வெளியாகி இருந்தது.





தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த அஜித் இன்று காலை திடீரென திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். விஐபிகளுக்கான நேரத்தில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு சென்ற இவரை கோயில் அதிகாரிகள் அடையாளம் கண்டு சிறப்பு மரியாதை செய்து, பிரசாதங்கள் வழங்கினர்.

ரங்கநாயகி அம்மாள் சன்னதிக்கு சென்ற இவருக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அங்கிருந்த ரசிகர்கள் அஜித்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்