ஆப்நகரம்

AK 62: 'ஏகே 62' பட வாய்ப்பை கைப்பற்றிய பிரபல இயக்குனர்: தரமான சம்பவம் லோடிங்.!

'துணிவு' படத்தினை தொடர்ந்து அஜித நடிக்கவுள்ள 'ஏகே 62' படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 1 Feb 2023, 8:02 pm
கடந்த ஜனவரி அஜித்தின் 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் தொடர்ச்சியாக மூன்று தடவை எச். வினோத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனையடுத்து அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்பது தான் நெட்டிசன்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
Samayam Tamil Ajith Kumar
Ajith Kumar


அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக கடந்த 11 ஆம் தேதி 'துணிவு' வெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் பாதி முழுக்கவும் அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாகவும், இரண்டாம் பாதி வங்கி சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதகாவும், லைகா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் 'துணிவு' பட ரிலீசுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு பிறகு அஜித்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் விக்னேஷ் சிவன் அஜித்துக்காக எழுதிய கதை அவருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் இந்தப்படத்திலிருந்து அவர் விலகியுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. இதனால் 'ஏகே 62' படத்தை யார் இயக்குவார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Suriya 42: 'சூர்யா 42' படம் குறித்து தீயாய் பரவிய வதந்தி: படக்குழு அதிரடி விளக்கம்.!

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் மகிழ்திருமேனி 'ஏகே 62' படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் படத்தை மகிழ் இயக்கியிருந்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Hansika: கணவரின் முதல் திருமண சர்ச்சை: கண்ணீர் விட்ட நடிகை ஹன்சிகா.!

மகிழ் திருமேனி இயக்கத்தில் இதற்கு முன்பாக வெளிவந்த மீகாமன், தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களுக்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விரைவில் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்