ஆப்நகரம்

விஸ்வாசத்தை அடுத்து பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜீத்!?

‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து பாலிவுட்டில் வெளியான ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 24 Jul 2018, 4:33 pm
‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து பாலிவுட்டில் வெளியான ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil விஸ்வாசத்தை அடுத்து பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜீத்!?
விஸ்வாசத்தை அடுத்து பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜீத்!?


நடிகர் அஜீத் ஒரு படம் முடிந்த பின்புதான் அடுத்தப் படத்திற்கான வேலையை தொடங்குவார். இடையில் வேறு படங்களில் நடிக்கவோ, பூஜை போடவோ ஒருபோதும் செய்யமாட்டார். தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இதையடுத்து இயக்குனர் வினோத்துடன் இணைய இருப்பதாக நிறைய செய்திகள் வருகின்றன.

விஸ்வாசத்தை அடுத்து பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜீத்!?


ஆனால் தற்போது அஜீத்தின் அடுத்தப் படம் பற்றி வேறு விதமான செய்திகள் உலா வருகின்றன. அது என்னவென்றால், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்தில் அஜீத் படம் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. போனி கபூருடன் மற்றொரு பெரிய நிறுவனமும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனராம். அவர்களிடம் ஒரு பாலிவுட் ஹிட் படத்தின் ரீமேக் உரிமை இருக்கிறதாம். அந்த படத்தின் ரீமேக்கில் தான் அஜீத் அடுத்து நடிக்க இருக்கிறார் என்று புதிய செய்திகள் வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்