ஆப்நகரம்

மகளின் பள்ளி விழாவில் சைக்கிள் டயர் ஓட்டிய தல அஜித்!

நடிகர் அஜித் தனது மகளின் பள்ளி விழாவில் சைக்கிள் டயர் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 12 Feb 2018, 9:43 am
நடிகர் அஜித் தனது மகளின் பள்ளி விழாவில் சைக்கிள் டயர் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil ajith participated in her daughter school function
மகளின் பள்ளி விழாவில் சைக்கிள் டயர் ஓட்டிய தல அஜித்!


தமிழ் சினிமாவுலகிலேயே நடிகர் அஜித் மட்டும் தான் விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தை வைத்துள்ளார். கார் ரேஸ், பைக் ரேஸ் என பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவின் பள்ளி விழா ஒன்றில் மனைவி ஷாலினியுடன் கலந்துக் கொண்டார்.



பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அனொஷ்காவுடன் இணைந்து சைக்கிள் டயர் ஓட்டும் பந்தயத்தில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு சைக்கிள் டயரை உருட்டிச் செல்லும் அப்பா தடுமாற, அதைப் பார்க்கும் அனொஷ்கா சந்தோஷமாக் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்