ஆப்நகரம்

“தல” சிகரெட்டை வெறுத்ததற்கு காரணம் இதுதான்!

“தல” சிகரெட்டை வெறுத்ததற்கு காரணம் இதுதான்!

TOI Contributor 19 Feb 2017, 5:09 pm
தமிழ் சினிமாவின் தல என்னறாலே அது அஜித் தான் என்று எல்லோருக்கும் தெரியும். சக மனிதர்களுடன் பழகுவதிலும், வெளிப்படையாக பேசும் குணத்தாலும் பல நடிகர்களின் ஃபேவரிட் இவர். அதுமட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்களும் இவருக்கு உண்டு. அதே போன்று திருமண வாழ்விலும் அஜித், ஷாலினி தம்பதியை எல்லோருக்கும் பிடிக்கும்.
Samayam Tamil ajith quits his smoking habit because of this reason
“தல” சிகரெட்டை வெறுத்ததற்கு காரணம் இதுதான்!


சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் அஜித் அதிகமாக சிகரெட் குடிப்பாராம். ஒரு செயின் ஸ்மோக்கர் என்று கூட சொல்லலாம். இந்த அளவிற்கு புகை பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்த அஜித் ஷாலினியை காதலிக்க தொடங்கிய பிறகு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டாராம். காதலிக்க தொடங்கிய பிறகு சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுங்கள் என்று ஷாலினி சொல்லிய பிறகு அஜித் சிகரெட் பிடிப்பதில்லை. சினிமாவில் காட்சிக்கு தேவை என்றால் மட்டும் சிகரெட் பிடிப்பாரே தவிர, திரைக்கு பின்னால் சிகரெட்டை தொடுவது கூட இல்லை!

அடுத்த செய்தி

டிரெண்டிங்