ஆப்நகரம்

இணையத்தில் வைரலாகும் அஜித்-ஷாலினி புகைப்படம்

நடிகர் அஜித் -ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைலாகி வருகிறது.

TNN 6 Jul 2017, 1:42 pm
நடிகர் அஜித் -ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைலாகி வருகிறது.
Samayam Tamil ajith shalini photo goes viral in social media
இணையத்தில் வைரலாகும் அஜித்-ஷாலினி புகைப்படம்


நடிகர் அஜித் பற்றிய செய்திகள் ரசிகர்களுக்கு தேவையில்லை. அவர் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு புகைப்படம் வெளியானாலே போதும் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் டிரெண்ட் ஆகி வரும் நிலையை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் அஜித் மற்றும் ஷாலினியுடன் 5 இளைஞர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருகிறது.

அஜித், ஷாலினி இருவருமே கருப்பு உடையில் இருக்க, ஷாலினி தோள்மீது அஜித் கைபோட்டு ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படம் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் அஜித்-&ஷாலினி தம்பதியினர் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்