ஆப்நகரம்

Ajith அஜித்தின் வலிமை: கண்ணா ஒன்னு இல்லை இரண்டு அப்டேட் வேண்டுமா?

வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

Samayam Tamil 26 Dec 2019, 8:54 am
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
Samayam Tamil ajith starrer valimai first schedule is done
Ajith அஜித்தின் வலிமை: கண்ணா ஒன்னு இல்லை இரண்டு அப்டேட் வேண்டுமா?


வலிமை

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அங்கு சண்டை காட்சிகளை படமாக்கினார் வினோத். இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அஜித் சென்னை திரும்பிவிட்டார்.

சென்னையில் அஜித்

அஜித் தனது குடும்பத்தாருடன் சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாம். இதற்காக ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோஸில் மிகப் பெரிய செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வலிமை படத்திற்காக அஜித் புது கெட்டப்பில் இருக்கிறார். அது வெளியே தெரிந்துவிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை வினோத் எடுத்துள்ளார்.

வலிமை ஏன்?

அது என்ன படத்திற்கு வலிமை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அஜித்தின் கதாபாத்திரத்தின் குணத்தை குறிக்குமாம். மேலும் கதையும் வலிமையானதாம். அதனால் தான் படத்திற்கு வலிமை என்று பெயர் வைத்துள்ளார்களாம். படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் வருகிறாராம். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் காக்கிச் சட்டை அணிந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட்

வலிமை படத்தில் போலீஸ் அதிகாரி அஜித்தின் கதாபாத்திரம் வேதாளம் போன்று இருக்குமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆனால் ஹீரோயின் யார் என்பதை இதுவரை தெரிவிக்காமல் உள்ளார்கள். வலிமை குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்டேட் விஷயத்தில் வினோத்தும் சிவா போன்றே இருக்கிறார். என்ன செய்ய, தல ரசிகர்கள் ராசி அப்படி. ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இது தான் கண்ணுகளா அந்த இரண்டு அப்டேட். நீங்கள் எதிர்பார்க்கும் அப்டேட் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்