ஆப்நகரம்

இசையமைப்பாளர் டி.இமானை மனம் நெகிழ வைத்த அஜித்!!

நடிகர் அஜித், இசையமைப்பாளர் டி.இமானை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, அவரின் பாடல் படமாக்கப்படுவதை பார்க்க வைத்துள்ளார்.

Samayam Tamil 10 May 2018, 5:21 pm
நடிகர் அஜித், இசையமைப்பாளர் டி.இமானை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, அவரின் பாடல் படமாக்கப்படுவதை பார்க்க வைத்துள்ளார்.
Samayam Tamil இசையமைப்பாளர் டி.இமானை நெகிழ வைத்த அஜித்!!
இசையமைப்பாளர் டி.இமானை நெகிழ வைத்த அஜித்!!


நடிகர் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்து வருகிறார்.

கடந்த வாரம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில், டி.இமான் இசையமைத்துள்ள 3 பாடல்களை கேட்டு, நடிகர் அஜித் அவரைப் பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, டி.இமானை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து, அவரின் பாடல் படமாக்கப்படுவதை காண வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, டி.இமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இசையமைக்கும் பாடல்கள் படமாக்கப்படுவதை அடிக்கடி பார்ப்பது கிடையாது. ஆனால், விஸ்வாசம் படத்தில் எனது பாடலை எளிமையான மனிதரான அஜித்ரசித்து, நடனமாடுவதைப் பார்த்தது ஒரு வரம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அஜித்துடன் இருக்கும் படத்தையும் அதில் அவர் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்