ஆப்நகரம்

மீண்டும் இணையும் சிவா - அஜித் கூட்டணி?

அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் படம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 7:06 am
நடிகர் அஜித்குமாரும் இயக்குநர் சிறுத்தை சிவாவும் மீண்டும் இணைந்து வரலாறு சார்ந்த படம் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அஜித் வரலாற்று நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது புரளி என்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Samayam Tamil ajith to be join hands with siruthai siva in his next
மீண்டும் இணையும் சிவா - அஜித் கூட்டணி?


4 படங்கள்

அஜித்குமார் - சிறுத்தை சிவா ஜோடி தொடர்ந்து 4 படங்களில் பணியாற்றியது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் விவேகம் தவிர மற்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. விஸ்வாசம் படம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் விரும்ப வைத்தது. அதன் பிறகு அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து 2 படங்கள் செய்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் கிளம்பியுள்ளது.

​அஜித்தின் வலிமை

அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, போனி கபூர் அஜித் ஸ்டைலில் ஒரு சூப்பர் ஹிட் படம் வேண்டும் என ஹெச் வினோத்திடம் கேட்க, அதற்கு கதை தயார் செய்து அஜித்திடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். பின்னர் வலிமை படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மாறி மாறி நடைபெற்று வந்தது. சென்னையில் ஃபேன்ஸ் தொல்லை அதிகம் இருப்பதால் ஹைதராபாத்தில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

​சென்னையில் வலிமை

வலிமை படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது எனவும், சில ஃபைட் சீக்வென்ஸ் படம்பிடிக்கப்படவேண்டும் எனவும், அதில் அஜித் டூப் போடாமல் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனா வந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தும்படி ஆகிவிட்டது. கொரோனா பரவல் நிறுத்தப்பட்டதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். வலிமை படம் முடிந்த பிறகுதான், அஜித் அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பார் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்