ஆப்நகரம்

மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்!

உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ’மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹம்’ படத்தின் செட்டிற்கு அஜித் சென்றுள்ளார்.

Samayam Tamil 17 Feb 2019, 7:28 pm
’விஸ்வாசம்’ படத்திற்கு பிறகு, ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Ajith


அங்கு மோகன்லால் நடிப்பில் உருவாகும் ’மரக்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இப்படம் "குஞ்சலி மரக்கர் IV" என்பவரின் உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்தப் படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். இந்நிலையில் ‘மரக்கர்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அஜித் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அப்போது அங்கிருந்த பிரியதர்ஷன் உடன் சிறிது நேரம் உரையாடியுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கை இயக்குகிறார்.

இந்தப் படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் உருவாக்குகிறார். இப்படம் ரூ.100 கோடி செலவில் உருவாகி வருகிறது. இதில் பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், அர்ஜூன், முகேஷ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்