ஆப்நகரம்

நடிகர் விஷாலால் தாமதமாகும் அஜீத்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு!

நடிகர் விஷாலின் அதிரடி முடிவால் அஜீத்தின் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்று தெரிகிறது.

Samayam Tamil 12 Mar 2018, 2:13 pm
நடிகர் விஷாலின் அதிரடி முடிவால் அஜீத்தின் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்று தெரிகிறது.
Samayam Tamil ajith viswasam movie getting delay for vishal decision
நடிகர் விஷாலால் தாமதமாகும் அஜீத்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு!


நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேற்று அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவால் புதிய படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலையும் நடைபெறாது என்று அறிவித்தார். இதனால் வரும் 23ஆம் தேதி தொடங்குவதாக இருந்த அஜீத்தின் ‘விசுவாசம்‘ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்றே தெரிகிறது.

சிவா இயக்கத்தில் அஜீத், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள ‘விசுவாசம்‘ படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு தயாராக உள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவால் படப்பிடிப்பு தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர்தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்