ஆப்நகரம்

Thala60: அஜித்தின் வலிமை எப்போது வெளியீடு தெரியுமா?

அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Oct 2019, 5:36 pm
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகும் புதிய படம் வலிமை. இப்படத்தின் பூஜை நேற்று மைலாப்பூரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் அஜித் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
Samayam Tamil Ajith Kumar Valimai


அஜித்தின் வலிமை பட டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானதுமே தல ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்தும், ட்விட்டரில் #Valimai என்ற ஹேஸ்டாக் உருவாக்கியும் தங்களது மகிழ்ச்சியை அமர்க்களமாக கொண்டாடியுள்ளனர். தற்போது வரை அந்த ஹேஸ்டாக் 3 மில்லியன் வரை எட்டியுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு படத்தின் டைட்டில் ஹேஸ்டேக் அதிக மில்லியனை எட்டியுள்ளது என்றால் அது வலிமை மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


இப்படத்தில், அஜித் போலீஸ் அதிகாரியாகவும், அனிகா அவரது மகளாகவும் நடிக்கின்றனர். ஆனால், அஜித்துக்கு யார் ஜோடியாக நடிப்பார்கள்? என்ற கேள்விக்கு த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பெயர் அடிபடுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், போனி கபூர் தயாரிப்பில் மைதான் என்ற பாலிவுட் படத்தில் நடிப்பதால், வலிமை படத்தில் அவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், இப்படம் வரும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டில் தான் வெளியானது. அதே போன்று வலிமை படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்