ஆப்நகரம்

தல ‘விசுவாசம்’ மே 4ல் படப்பிடிப்பு ஆரம்பம்!

அஜீத் நடிப்பில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு மே 4ம் தேதி தொடங்கவுள்ளது.

Samayam Tamil 23 Apr 2018, 3:25 pm
அஜீத் நடிப்பில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு மே 4ம் தேதி தொடங்கவுள்ளது.
Samayam Tamil viswasam


நடிகர் அஜீத், இயக்குனர் சிவா ஆகியோர் கூட்டணி ‘விசுவாசம்’ படம் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கவேண்டியது. திடீரென நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க ஸ்டிரைகால் படப்பிடிப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்து படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் அஜீத் நடிக்கும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 4ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மே 1, அஜீத்தின் பிறந்த நாள், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் படப்பிடிப்புக்கு கிளம்பவுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் படத்தில் தம்பி ராமையா, யோகிபாபு , ரோபோ சங்கர், போஸ் வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்