ஆப்நகரம்

இந்த வாரம் ‘தேவ்’, ‘ஒரு அடார் லவ்’ ஆகிய படங்களுடன் இணைந்த ‘விஸ்வாசம்’!

இந்த வாரம் வெளியான கார்த்தியின் ‘தேவ்’ மற்றும் பிரியா வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ ஆகிய படங்களுடன் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் இணைந்துள்ளது.

Samayam Tamil 14 Feb 2019, 3:15 pm
2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்துடன் ரஜினியின் ‘பேட்ட’ படமும் வெளியானது. ஆனால், ‘விஸ்வாசம்’ படம் மட்டும் இன்னும் வசூல் சாதனை படைத்து வருகிறது. ‘விஸ்வாசம்’ படத்தை குடும்பம் குடும்பமாக தியேட்டரில் வந்து பார்த்து ரசிக்கிறார்கள்.
Samayam Tamil viswasam


அஜித் & சிவா கூட்டணியில் வந்த படங்களில் இந்தப் படம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதே நேரத்தில் அஜித்தின் படங்களில் அதிக வசூல் கொடுத்த படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. படம் வெளிவந்து 5 வாரங்கள் கடந்த பின்னும் இன்னும் 200 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 6 ம் வாரத்திலும் தேவ், ஒரு அடார் லவ் என படங்கள் வந்தும் விஸ்வாசம் படம் நீடித்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்