ஆப்நகரம்

கபாலியைக் காலிசெய்ய வருகிறது விவேகம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தை காலிசெய்யும் விதமாக தல அஜித் நடிப்பில் விவேகம் திரைப்படம் தயாராகியுள்ளது.

TNN 28 Mar 2017, 5:13 pm
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தை காலிசெய்யும் விதமாக தல அஜித் நடிப்பில் விவேகம் திரைப்படம் தயாராகியுள்ளது.
Samayam Tamil ajiths vivegam is all set to beat kabali
கபாலியைக் காலிசெய்ய வருகிறது விவேகம்


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் கபாலி. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக விமானத்தில் கபாலி போஸ்டர் வைப்பது வரை புதுமையான பல ஐடியாக்களை பின்பற்றினர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கபாலி படத்தில் ரஜினி கோட், சூட் அணிந்து நிற்பது போன்ற பொம்மையை வடிவமைத்து விற்பனை செய்தது. இந்த கபாலி பொம்மையை 40 ஆயிரம் பேர் வாங்கியுள்ளனர் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இதே போன்ற பொம்மையை தல அஜித் நடிப்பில் வரவிருக்கும் விவேகம் படத்திற்கும் தயாராகியுள்ளது. விவேகம் முதல் பார்வை போஸ்டரில் உள்ளது போன்ற அஜித்தின் உருவத்தை பொம்மை வடிவில் செய்திருக்கிறார் மதுரை இளைஞர் ஒருவர். சிக்ஸ் பேக் தோற்றத்தில் அஜித் நிற்கும் இந்த ஸ்பெஷல் விவேகம் பொம்மை விரைவில் விற்பனைக்கு வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்