ஆப்நகரம்

விவேகம் படத்தின் டீசர், பாடல்கள் வெளியீடு எப்போது தெரியுமா?

விவேகம் படத்தின் டீசர், பாடல்கள் வெளியீடு எப்போது தெரியுமா?

TOI Contributor 6 Feb 2017, 2:14 am
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் டீஸர், பாடல்கள் வெளியிடப்படும் நாட்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளன. அதன்படி அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்தில் டீசர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று படத்தின் பாடல்கள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.
Samayam Tamil ajiths vivegam movie teaser going to release soon
விவேகம் படத்தின் டீசர், பாடல்கள் வெளியீடு எப்போது தெரியுமா?


விவேகம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்திற்கான எல்லாப்பாடல்களையும் கம்போஸ் செய்து தயாராக வைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் குறித்து டுவிட்டரில் பல முறை அனிருத் பதிவு செய்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ரொம்ப மாஸாக வந்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறிந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, வீரம், வேதாளம் தொடர்ந்து அஜீத்தை வைத்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் விவேகம். இதில் காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்