ஆப்நகரம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தல பட வில்லன்!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தல படத்தின் வில்லன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Jan 2019, 7:47 pm
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தல படத்தின் வில்லன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil obe


அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் என்று பலரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக வருவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், எம்.எஸ்.தோனி, சச்சின், மேரி கோம் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியுள்ளது. அதே போன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கூட தற்போது படமாக உருவாகிறது. டீ விற்பது முதல் தற்போது பிரதமரானது வரை வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மேரி கோம் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய் இயக்குனர் ஓமங் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு பிஎம் நரேந்திர மோடி (PM Narendra Modi) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், நரேந்திர மோடியாக தல அஜித் நடிப்பில் வந்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. இதனை மகாராஷ்டிரா முதல்வரும், பாஜக உறுப்பினருமான தேவேந்திர பட்நாவிஸ் 23 மொழிகளில் வெளியிடுகிறார். இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்